Saturday, April 17, 2010

காலத்தின் வாய்க்குள்

காலத்தின் வாய்க்குள்

முதல்முடிவு எதையும் காட்டாமல்
தொலைதூரத்தில் தெரியும்
உன் கண்களை கழற்றி எறி

சிலந்தியின் வாய்க்குள்
உனது விரல்கள்
காணாமல் போகும் காலங்கள்
கூடுகளில் இழைத்துக் கொண்டிருக்கும்
விரல்கள் வேண்டாம்

நத்தை நிறுத்திலான உனது பயணம்
எல்லைகள் தாண்டுவதில்லை
மலத்தை மிதித்து மிதித்தே
அழுக்கேறிப்போன கால்களால்
நிலையான சுவட்டை

உருவாக்க முடியாததால்
அதை வெட்டி வீசு

அணிந்து கொள்கிறாய்
துரோகங்களையும் அவமானங்களையும்
துணை தேடி தேடியே
சுய விலாசமிழந்தது
உன் இருப்பு

மாற்றான் முடைந்த பாயில்
உனது படுக்கை
புழுதியெங்கும் பதிந்து கிடக்கின்றன
பழைய சுவடுகள்
இதில் எங்கும் உறங்க வைத்திருக்கிறாய்
உனது பாதங்கள்

1 comment:

  1. நண்பருக்கு வணக்கம்! கடந்த சில ஆண்டுகளாக உயிரோசை, கீற்று, யூத்விகடன், அகநாழிகை, வார்ப்பு, திண்ணை போன்ற பல இலக்கிய இதழ்களில் "உழவன்" என்ற புனைபெயரில் நான் கவிதை, சிறுகதை எழுதிக்கொண்டிருக்கிறேன். வடக்கு வாசல் ஆசிரியர் மூலம் நீங்கள் "உழவன்" என்ற பெயரை வைத்திருப்பதாக தற்சமயம் அறிந்தேன். கிட்டத்தட்ட பெரும்பாலான தமிழ் வலைப்பதிவர்களுக்கு, நான் தான் உழவன் என்று தெரியும். ஆகையால், தயைகூர்ந்து இப்பெயரை எனக்கு விட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    அன்புடன்
    உழவன்
    94443 59993
    tamil.uzhavan@gmail.com
    www.tamiluzhavan.blogspot.com

    ReplyDelete